வேளாண்மை அலுவலக ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு

வேளாண்மை அலுவலக ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு

Update: 2022-09-08 20:12 GMT

கொட்டாம்பட்டி

கொட்டாம்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றனர்.

ேகாவில் திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் நல்லையா. இவருடைய மகன் துரைராஜ் (வயது 47). மேலூர் விநாயகபுரம் வேளாண்மை அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்றுமுன்தினம் துரைராஜ் நத்தத்தில் நடந்த கும்பாபிஷேகத்திற்க்கு சென்றுவிட்டார். அவருடைய மனைவி திருச்சுனையில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுவிட்டார்.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து திருடி சென்று விட்டனர். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கபட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே போய் பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6½ பவுன் நகை மற்றும் 90 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

ஆய்வு

இதுகுறித்த தகவல் அறிந்த கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் சாந்திபாலாஜி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நகை, பணத்ததை திருடி சென்ற ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்