பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

Update: 2022-06-28 18:49 GMT

சிவகங்கை அடுத்த தமறாக்கி தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி சேங்கைச் செல்வி(வயது 25). சம்பவத்தன்று சிவகங்கையில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்த அவர் தமறாக்கி அருகே செல்லும்போது சாலையில் பாலம் கட்டும் பணிக்காக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டிருந்தது. சேங்கைச்செல்வி அந்த மாற்றுப்பாதையில் செல்லும்போது அங்கு 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் எதிர்பாராதவிதமாக சேங்கைச் செல்வி அணிந்திருந்த 3½ பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.

இதைத்தொடர்ந்து சேங்கைச் செல்வி கழுத்திலிருந்த தங்க சங்கிலியை இறுகப் பிடித்தபடி திருடன் திருடன் என்று கத்தினார். இதற்கிடையில் அந்த 4 பேரும் கையில் கிடைத்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் போஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்