பெண்ணிடம் நகை பறிப்பு

தாடிக்கொம்பு அருகே பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2022-06-09 16:57 GMT

தாடிக்கொம்பு அருகே உள்ள விட்டல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 57). இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவருடன் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தாடிக்கொம்பை அடுத்த தனியார் நூற்பாலை அருகே 4 வழிச்சாலையில் வந்தபோது, பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்