தனியார் நிறுவன ஊழியரை தாக்கி 2½ பவுன் நகை பறிப்பு

கடலூர் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கி 2½ பவுன் நகையை பறித்து சென்ற வடமாநில தொழிலாளர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-06-02 17:52 GMT

கடலூர்,

கடலூர் அருகே வி.காட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகன் பற்குணன் (வயது 29). இவர் முதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் எம்.புதூர் புறவழிச்சாலை அமைக்கும் வழியாக சென்ற போது, அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள் 5-க்கும் மேற்பட்டவர்கள் அவரை வழிமறித்து, இரும்பு குழாயால் தாக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் நகை மற்றும் செல்போனை பறித்து சென்றதாக தெரிகிறது.

வலைவீச்சு

இந்த தாக்குதலில் காயமடைந்த பற்குணம் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி பற்குணன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பற்குணனை தாக்கி நகையை பறித்து சென்ற வட மாநில தொழிலாளர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்