கமுதி
அபிராமத்தை அடுத்துள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் கருப்பன். இவரது மகன் மந்திரமூர்த்தி(வயது 36). இவர் பார்த்திபனூரில் நடைபெற்ற தனது நண்பர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். பெரிய ஆனைக்குளம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது சோர்வாக இருந்ததால் அங்கிருந்த ஒரு மரத்தடியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கினார். பின்னர் எழுந்து பார்த்தபோது மந்திரமூர்த்தி சட்டை பையில் இருந்த செல்போன், 1500 ரூபாய், 2 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அபிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.