விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறு பகுதியை சேர்ந்தவர் மாரித்தாய் (வயது 44). இவர் காரியாபட்டியில் இருந்து விருதுநகர் வரும் டவுன் பஸ்சில் ஏறி விருதுநகர் அல்லம்பட்டி முக்கு ரோட்டில் இறங்கினார். பஸ்சில் வரும்போது இவர் அருகே கருப்பு பர்தா அணிந்த 2 பெண்கள் மாரித்தாயை உரசியபடியே நின்று கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. பஸ்சில் இருந்து இறங்குவதற்கும் வழி விடாமல் நின்று கொண்டிருந்த அவர்களை தள்ளி விட்டு மாரித்தாய் கீழே இறங்கினார். அப்போது அவரது பை லேசாக திறந்து இருந்தது. அதைகண்டு கொள்ளாமல் மாரித்தாய் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பின்னர் பையை பார்த்தபோது பையில் இருந்த 2 ½ பவுன் நகை திருடு போயிருந்தது. இதுபற்றி மாரித்தாய் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.