பூட்டிய வீட்டில் நகை திருட்டு

திருவாடானை அருகே பூட்டிய வீட்டில் நகை திருட்டு நடைபெற்றது.

Update: 2023-06-17 18:45 GMT

தொண்டி,

திருவாடானை சினேகவள்ளிபுரத்தைச் சேர்ந்தவர் கேசவன்(வயது 40). தையல் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்று விட்டார். இவருடைய மனைவி 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 8 பவுன் நகையை திருடி சென்று விட்டனர்.. இது குறித்து கேசவன் அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்