3 வீடுகளில் நகை திருட்டு
மேல்மலையனூர் அருகே 3 வீடுகளில் நகை திருடியது மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேல்மலையனூர் அருகே வடுகப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சிங்காரம் (வயது 40) விவசாயி. இவரது வீட்டுக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் புகுந்து அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 4¼ பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர். மேரும் அருகில் இருந்த அன்பரசு வீட்டில் 1¼ பவுன் நகை, ரூபாய் ஆயிரம் மற்றும் அழகேசன் வீட்டில் 2¼ பவுன் ஆகியவற்றையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.