ஆட்டோவில் சென்ற ஐ.டி.பெண் ஊழியரிடம் நகை பறிப்பு
ஆட்டோவில் சென்ற ஐ.டி.பெண் ஊழியரிடம் நகை பறித்த டிரைவர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆட்டோவில் சென்ற ஐ.டி.பெண் ஊழியரிடம் நகை பறித்த டிரைவர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஐ.டி.பெண் ஊழியரிடம் நகை பறிப்பு
தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் இப்ராஹிம். இவரது மகள் ரபீனா பாத்திமா (வயது 24). என்ஜினீயரான இவர் மதுரை உத்தங்குடி வளர்நகரில் தங்கி பாண்டிகோவில் அருகே உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக மேலூர் பைபாஸ் ரோட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த ஆட்டோவில் டிரைவர் மற்றும் சீருடை அணியாமல் மேலும் 2 பேர் பயணம் செய்தனர். சிறிது தூரம் சென்றதும் அவர்கள் ஆட்டோவை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தினார்கள். பின்னர் அவர்கள் ரபீனாபாத்திமா அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் என 2 பவுன் நகைகளை பறித்து கொண்டனர்.
3 பேருக்கு வலைவீச்சு
மேலும் இது குறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று மிரட்டல் விடுத்து விட்டு தப்பி விட்டனர். உடனே அவர் ஆட்டோ நம்பரை குறித்து வைத்து கொண்டு நேராக மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு ஆட்டோவில் நடந்த சம்பவங்களை தெரிவித்து புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐ.டி. பெண் ஊழியரிடம் நகையை பறித்து சென்ற ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 3 பேரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.