சேத்தியாத்தோப்பு அருகே கோவிலில் நகை திருட்டு
சேத்தியாத்தோப்பு அருகே கோவிலில் நகை திருடு போனது.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு அடுத்த வட்டத்தூர் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு சேகர் என்பவர் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று இவர், பூஜை முடிந்த பின்னர் கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது, கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அம்மன் கழுத்தில் அணிந்திருந்த ½ பவன் தாலி செயின் மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணமும் திருடு போயிருந்தது.
இதுகுறித்து சேகர், சோழத்தரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.