காய்கறி கடை உரிமையாளர் வீட்டில் நகை திருட்டு

காய்கறி கடை உரிமையாளர் வீட்டில் நகை திருட்டு நடந்து இருப்பது தெரியவந்தது,

Update: 2023-07-15 18:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சாமிநத்தம் ஊரைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 36). இவர் சிவகாசியில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்று விட்டார். அவரது மனைவி தனது தாயார் வீட்டிற்கு கோவில்பட்டிக்கு சென்று இருந்தார். இந்தநிலையில் இரவு கடையை மூடிவிட்டு கோவிந்தன் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ரூ.5 லட்சம் மதிப்புள்ள 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது, இச்சம்பவம் குறித்து மல்லி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்