கப்பல் படை வீரர் வீட்டில் நகை திருட்டு

பழனி அருகே கப்பல் படை வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 4½ பவுன் நகை திருடப்பட்டது.

Update: 2023-07-27 20:00 GMT

பழனி அருகே உள்ள கோதைமங்கலத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 42). இவர், காரைக்காலில் கப்பல் படை வீரராக உள்ளார். இதனால் தனது குடும்பத்தினருடன் அவர் காரைக்காலில் வசிக்கிறார். அவருடைய தாய் ராமுத்தாய் (60), கோதைமங்கலத்தில் உள்ள வீட்டில் வசிக்கிறார். இவர்களுக்கு கோதைமங்கலம் ஓம்சக்தி நகரிலும் வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு ராமுத்தாய் தினமும் சென்று வருவது வழக்கம்.

அதன்படி நேற்று அவர் ஓம்சக்தி நகரில் உள்ள வீட்டுக்கு சென்றார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு வீட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4½ பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸ் நிலையத்தில் ராமுத்தாய் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் ஆள் இல்லாதததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகையை திருடி சென்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்