ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் நகை திருட்டு

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் நகை திருட்டு

Update: 2022-11-10 18:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் மன்னர் திருமலை நகரில் வசித்து வருபவர் கணேசன் (வயது 62). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகள் கோயம்புத்தூரில் இருப்பதால் அங்கு சென்றுவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து உள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள் மற்றும் எல்.இ.டி. டி.வி.யும் தூக்கிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகரில் இருந்து கைரேகை நிபுணர்களும் நகை திருட்டு போன வீட்டிற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் மன்னர் திருமலை நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்