மதுரை ஆலத்தூர் திருமால்புரத்தை சேர்ந்தவர் காத்தாயி (வயது 46). சம்பவத்தன்று இவர் ஊமச்சிக்குளம்-கடச்சனேந்தல் மெயின் ரோட்டில் நடைபயிற்சி சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் திடீரென்று காத்தாயி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.