விருத்தாசலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

விருத்தாசலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை மா்மநபா் பறித்து சென்றுவிட்டாா்.

Update: 2022-07-24 17:50 GMT


விருத்தாசலம், 

விருத்தாசலம் காலேஜ் ரோடு வடக்கு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருடைய மனைவி ஜோதி (வயது 40). இவர் விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மாலை இவர் வங்கியில் இருந்து தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி மினி விளையாட்டு அரங்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், திடீரென ஜோதியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்