சாய்பாபா காலனி
கோவை சாய்பாபா காலனி நாராயண குரு ரோட்டை சேர்ந்தவர் மல்லிகா (வயது 65). இவர் நேற்று முன்தினம் சாய்பாபா காலனியில் உள்ள கடைக்கு காய்கறி வாங்க நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென மல்லிகா கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இது குறித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.