காட்டுமன்னார்கோவில் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபருக்கு தர்ம அடி

காட்டுமன்னார்கோவில் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனா்.

Update: 2022-12-02 19:05 GMT


காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே ரம்ஜான் தைக்கால் பகுதியை சேர்ந்தவர் ஜன்னத்து நிஷா(வயது 75). நேற்று காலை இவர் வீட்டின் அருகே நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த 35 வயது வாலிபர், ஜன்னத்து நிஷா அணிந்திருந்த 1 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.

இதில் அவர் கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்து அந்த வாலிபரை துரத்தி சென்று மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து அவனிடமிருந்த தங்கசங்கிலியை பிடுங்கி மூதாட்டியிடம் கொடுத்தனர். இதற்கிடையே அந்த வாலிபர் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பி, ஓடிவிட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்