ரெயிலில் நகை பறிப்பு: வட மாநில கொள்ளையர்கள் 2 பேருக்கு சிறை தண்டனை

ரெயிலில் நகை பறிப்பு சம்பவத்தில் வட மாநில கொள்ளையர்கள் 2 பேருக்கு மதுரை மாவட்ட கோர்ட்டு சிறை தண்டனை விதித்தது

Update: 2023-02-15 20:17 GMT


கடந்த ஆண்டு ஜூலை மாதம் மதுரை ரெயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வந்த ரெயிலில் பயணித்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோஸ்பின் சுகந்தி என்பவரிடம் 4 பவுன் தங்க நகையை வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பறித்து கொண்டு தப்பினர். இதுதொடர்பாக மதுரை ரெயில் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சடேந்திரகுமார் (வயது 40), ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லோகேந்திர குமார் பார்மர் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட 6-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. ரெயில்வே போலீசார் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த 7 மாதங்களிலேயே முழு விசாரணையும் முடிந்து, குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்கும் தலா ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் சந்தானகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்