மளிகை கடைக்காரர் வீட்டில் நகை-பணம் திருட்டு

மளிகை கடைக்காரர் வீட்டில் நகை-பணம் திருட்டு

Update: 2022-12-26 18:45 GMT

ஒண்டிப்புதூர்

கோவை ஒண்டிப்புதூர் இருகூர் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(வயது 54). இவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆனந்தகுமார் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள ஆலயத்துக்கு பிரார்த்தனைக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 11 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன்கள் திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தகுமார், சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்