தியாகதுருகத்தில்சாலையில் கிடந்த நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

தியாகதுருகத்தில் சாலையில் கிடந்த நகையை போலீசில் ஆட்டோ டிரைவர் ஒப்படைத்தாா்.

Update: 2023-03-13 18:45 GMT


தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு மகன் சிங்காரவேல் (வயது 37). ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று கொட்டையூர் கிராமத்தில் தியாகதுருகத்துக்கு சவாரிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து தியாகதுருகத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி எதிரே வந்த போது, கீழே நகை கிடப்பதை பார்த்தார். இதையடுத்து, ஆட்டோவை நிறுத்திவிட்டு கீழே இறங்கி அதை எடுத்து பார்த்த போது, 2 பவுன் தங்க சங்கிலி என்பது தெரியவந்தது. அக்கம், பக்கம் விசாரித்து பார்த்ததில் அது யாருடையது என தெரியவில்லை.

இதையடுத்து, அந்த நகையை தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதியிடம் அவர் ஒப்படைத்தார். ஆட்டோ டிரைவரின் இந்த செயலை போலீசார் பாராட்டி, சன்மானம் வழங்கினர். அப்போது தனிப்பிரிவு போலீஸ் ஆறுமுகம் உடன் இருந்தார். மேலும், நகை யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்