ஓட்டல் உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
பாளையங்கோட்டை அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டில் நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் உய்க்காட்டான் (வயது 39). இவர் கே.டி.சி.நகரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். அப்போது மர்மநபர்கள் அவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 18 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று மாலையில் வீடு திரும்பிய உய்க்காட்டான், வீட்டில் நகை, பணம் கொள்ளை ேபானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவந்திப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.