யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி ஜீஜீ!

யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி ஜீஜீ! சாதனை படைத்துள்ளார்.

Update: 2023-05-23 11:19 GMT

சென்னை,

கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடிமையியல் பணிகளுக்கான தேர்வுகள் நடைபெற்றன. முதற்கட்ட தேர்வு முடிந்து ஜூன் மாதமே முடிவுகள் வெளியாகின. இதனை அடுத்து, டிசம்பர் மாதம் முக்கிய தேர்வு முடிந்து, டிசம்பர் 6ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.

இதனை அடுத்து, கடந்த மே 18ஆம் தேதி நேர்காணல் நடைபெற்றது. தற்போது இதற்கான மொத்த மதிப்பெண் பட்டியலும் வெளியாகியுள்ள்ளது.அதில், முதல் 4 இடங்களை பெண்கள் கைப்பற்றியுள்ளனர். இஷிதா கிஷோர் என்ற பெண் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

கடந்த வருடம் 3 பெண்கள் முதல் 3 இடத்தை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 933 காலிப்பணியிண்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

இந்தநிலையில், யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியிலேயே தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும் தேசிய அளவில் 107-வது இடத்தையும் பெற்று சாதித்துள்ளார். சென்னை பெரம்பூரை சேர்ந்த மாணவி ஜீஜீ.

Tags:    

மேலும் செய்திகள்