ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவு வெளியீடு: ஆலன் பயிற்சி நிறுவனத்தில் படித்த 22 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி

ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் ஆலன் பயிற்சி நிறுவனத்தில் படித்த 22 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். பெண்கள் பிரிவில் ரித்தி மகேஸ்வரி தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Update: 2023-05-03 19:06 GMT

சென்னை,

ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவுகளுடன், அகில இந்திய தரவரிசையையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதில் ஆலன் பயிற்சி நிறுவனத்தில் படித்த மாணவர்கள் சிறப்பான இடத்தை பிடித்திருக்கிறார்கள். அகில இந்திய அளவில் முதல் 5 இடங்களில் 3 பேர் ஆலன் பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்கள் ஆவார்கள்.

குறிப்பாக ஆலன் பயிற்சி மையத்தில் படித்த மாணவி ரித்தி மகேஸ்வரி 100 சதவீத மதிப்பெண்களுடன், அகில இந்திய அளவில் 23-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் பெண்கள் பிரிவில் இந்தியாவிலேயே முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஆலன் பயிற்சி நிறுவன தலைவர் டாக்டர் பிரஜேஷ் மகேஸ்வரி கூறியதாவது:-

ஆலன் பயிற்சி நிறுவனம் சாதனை

ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவில், பிரபல பயிற்சி மையமான ஆலன் பயிற்சி நிறுவனம் சாதனைகளை படைத்திருக்கிறது. டாப்-5 இடங்களில் எங்கள் மாணவர்கள் 3 பேர் அங்கம் வகிக்கிறார்கள். எங்கள் மாணவர் மிருணால் ஸ்ரீகாந்த் வைரகடே 300-க்கு 300 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். மாணவி மலாய் கேடியா 300-க்கு 300 மதிப்பெண்கள் பெற்று 4-வது இடத்தையும், மாணவர் கவுஷல் விஜய்வர்கியா 300-க்கு 300 மதிப்பெண்கள் பெற்று 5-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

குறிப்பாக எங்கள் மாணவி ரித்தி மகேஸ்வரி அகில இந்திய அளவில் 23-வது இடத்தை பிடித்திருக்கிறார். 100 சதவீத மதிப்பெண்களுடன், பெண்கள் பிரிவில் தேசிய அளவில் இவர் முதலிடத்தில் இருக்கிறார். இதுவரை வெளிவந்த முடிவுகளில் ஆலன் பயிற்சி நிறுவன மாணவர்கள் 34 பேர் முதல் 100 இடங்களில் அங்கம் வகிக்கிறார்கள். 17 பேர் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்கள்.

22 ஆயிரம் பேர் தேர்ச்சி

அதேபோல மாநில அளவில் முதலிடம் பெற்ற 22 பேரும் எங்கள் மாணவர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். இதன்மூலம் ஆலன் பயிற்சி நிறுவனத்தில் இருந்து மொத்தம் 22,007 மாணவர்கள் ஜே.இ.இ. அட்வான்ஸ்டுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் 17 ஆயிரத்து 42 பேர் நேரடி வகுப்புகள் மூலமாகவும், 4 ஆயிரத்து 965 பேர் தொலைதூர வகுப்புகள் மூலமாகவும் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

சாதனை மாணவி ரித்தி மகேஸ்வரி கூறுகையில், "கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தான் எனது வெற்றிக்கான திறவுகோல்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்