கனகதாசர் ஜெயந்தி விழா

தேன்கனிக்கோட்டையில் கனகதாசர் ஜெயந்தி விழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபட்டனர்.

Update: 2022-12-25 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டையில் கனகதாசர் சேவா சமிதி சார்பில் ஜெயநதி விழா நடைபெற்றது. விழாவிற்கு, சேவா சமிதி தலைவா பாபன்னா தலைமை தாங்கினார். விழாவில் ஆந்திரா மாநில எம்.பி கோரனடி மாதவராவ், டெல்லி ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. தினேஷ்மவுரியா, ஆனேக்கல் சிவன்னா, கர்நாடக நடிகர் யோகேஷவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ரத்ததான முகாம், மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக பல்வேறு பகுதிகளில் இருந்து சாமிகள் அலங்கரித்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக விழா மேடை அருகே கொண்டு வரப்பட்டது. அங்கு திரண்டு இருந்த குரும்பர் இன மக்கள் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்