கனகதாசர் ஜெயந்தி விழா

ஓசூரில் கனகதாசர் ஜெயந்தி விழா நடைபெற்றது.

Update: 2022-11-13 18:45 GMT

ஓசூர்:

ஓசூரில், குரும்பர் சமூக மக்கள் சார்பில் கவி கனகதாசரின் 535-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் பாப்பண்ணா தலைமையில், பண்ட ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று தாசரபேட்டையில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற விழாவிற்கு, மாவட்ட குரும்பர் சமூக தலைவர் திம்மராஜ் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ.மனோகரன் கலந்து கொண்டு கனகதாசர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அரசு வக்கீல் சின்னபிள்ளப்பா, குரும்பர் சங்க நிர்வாகி சேகர் உள்பட பலர் விழாவில் பேசினார்கள். விழாவில், ஊராட்சி மன்ற தலைவர்கள் கோனேரிப்பள்ளி கோபம்மா சக்கர்லப்பா, திம்மசந்திரம் முனிகிருஷ்ணப்பா, தொழிலதிபர் சத்யமூர்த்தி, ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீலட்சுமி நவீன்குமார், சிவராமன் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர் அரசனட்டி மாதேஷ், அம்பரீஷ், பிரசன்னா, கிரண், ராஜூ, கணேஷ் முனிலிங்கராஜ் மற்றும் குரும்பர் சமுதாய மக்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்