ஜெயலலிதா நினைவு தின நிகழ்ச்சி

வேதாரண்யத்தில், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெயலலிதா நினைவு தின நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-12-05 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வாசலில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கிரிதரன், சுப்பையன், நகர செயலாளர் நமசிவாயம், அவைத் தலைவர் பழனிவேலு, இளைஞா் பாசறை மாவட்ட செயலாளர் மாணிக்கவாசு, தொழிற்சங்க பிரதிநிதிகள் அன்பழகன், வேதமூர்த்தி, குமார், செல்வகுமார், ஆனந்தராஜ், முருகானந்தம், மாரியப்பன், மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்