ஜெயலலிதா பிறந்தநாள் விழா
மணம்பூண்டியில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
திருக்கோவிலூர்
திருக்கோவிலூரை அடுத்துள்ள மணம்பூண்டியில் அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பட்டாசு வெடித்து வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வந்திருந்தவர்களை முன்னாள் கிளை செயலாளர் கணேசன் வரவேற்றார். ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட முன்னாள் பிரநிதி ஆறுமுகம், கூட்டுறவு சங்க தலைவர் மகாராஜன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவுக்கு தலைமை தாங்கிய கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ஆர்.குரு என்கிற விஜயசரண் அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதாவின் உருவ படம் ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் எஸ்.துரை, மாவட்ட மாணவர் அணி தலைவர் முருகன், கிளை செயலாளர் சேகர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.