அறங்காவலர்கள் குழு தலைவராக ஜெயக்குமார் தேர்வு
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் அறங்காவலர்கள் குழு தலைவராக ஜெயக்குமார் தேர்வு
கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர்களாக வடவள்ளி ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்த மகேஷ் குமார், நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார், சங்கனூரை சேர்ந்த பிரேம்குமார், தெலுங்குபாளையத்தை சேர்ந்த கனகராஜன், தொண்டாமுத்தூர் விராலியூரை சேர்ந்த சுகன்யா ராசரத்தினம் ஆகியோரை தமிழக அரசு நியமித்தது. அவர்கள் பதவி ஏற்கும் விழா மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அலுவலகத்தில் உள்ள வளாகத்தில் நடைபெற்றது.
கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் ரமேஷ், மருதமலை கோவில் துணை ஆணையர் ஹர்ஷினி, கோவை மண்டல உதவி ஆணையர் கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் அறங்காவலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவராக ஜெயக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
அதற்கான சான்றிதழை அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் வழங்கினார். அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமாருக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை, தி.மு.க. ஐடி பிரிவு மாநில செயலாளர் தமிழ்மறை, மீனா ஜெயக்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கோவில் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித் தனர். பின்னர் ஜெயக்குமார் மற்றும் அறங்காவலர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.