ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.ஆய்வு

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.ஆய்வு

Update: 2022-08-21 18:21 GMT

பாபநாசம்

ரெகுநாதபுரம், சரபோஜிராஜபுரம், வழுத்தூர் ஊராட்சிகளில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொள்முதல் நிலையத்துக்கு கட்டிடம் கட்டித்தரப்படும் என உறுதி அளித்தார்.

ஆய்வு

பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ரெகுநாதபுரம், சரபோஜிராஜபுரம், வழுத்தூர் ஆகிய ஊராட்சிகளில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். ரெகுநாதபுரம் ஊராட்சியில் இயங்கும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்ட அவரிடம், கொள்முதல் நிலையத்துக்கு கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பேசி கட்டிடம் கட்டித்தர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பார்வையிட்டார். முன்னதாக ஊராட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

உணவுப்பொருட்களின் தரம், இருப்பு

சரபோஜிராஜபுரம் ஊராட்சி வளாகத்தில் இயங்கி வரும் அரசு துணை சுகாதார மையத்தின் பணியாளர்களிடம் தினசரி செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக பெண்கள் விடுத்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

தொடர்ந்து சரபோஜிராஜபுரம் ஊராட்சி ரேஷன் கடைக்கு சென்று உணவுப்பொருட்களின் தரம் மற்றும் அவற்றின் இருப்பு குறித்து ஆய்வு செய்து, வினியோக நடவடிக்கைகள் குறித்த தகவல்களை மின்னணு ஆவணம் மூலம் பார்வையிட்டார்.

தீர்வு காண வேண்டும்

வழுத்தூர் ஊராட்சியில் நிலவிவரும் குப்பை மேலாண்மை பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து ஊராட்சி உறுப்பினர்களிடம் கருத்துக்களை கேட்டு, அவற்றை தீர்க்க ஆலோசனைகள் வழங்கி அதன் அடிப்படையில் தீர்வு காணுமாறு ஊராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டார். பின்னர் துணை சுகாதார வளாகத்தை பார்வையிட்டார். ஆய்வின்போது பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி கண்ணதாசன், தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் கோவி. அய்யாராசு, பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்