முத்தூரில் மல்லிகைப்பூ விலை உயர்வு

முத்தூரில் மல்லிகைப்பூ விலை உயர்வு

Update: 2022-09-09 12:53 GMT

முத்தூர்

முத்தூர் நகர, சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆவணி மாத முகூர்த்த விசேஷத்தை முன்னிட்டு கடந்த 6- ந் தேதி முதல் நேற்று காலை வரை தொடர்ந்து 4 நாட்களாக திருமணம், பூப்பு நன்னீராட்டு விழா, காதணி விழா, கோவில் கும்பாபிஷேகம், வளைகாப்பு விழா, குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல், வீடு கிரகப்பிரவேசம் என பல்வேறு சுப நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணம் உள்பட பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு சென்ற இளம் பெண்கள், இல்லத்தரசிகள் முத்தூர் கடைவீதி, பஸ் நிலையம், கொடுமுடி சாலை ரவுண்டானா பகுதிகளில் உள்ள பூக்கள், மாலை விற்பனை செய்யும் கடைகளில் மல்லிகைப்பூ ஒரு முழம் ரூ.150 வரை விலை கொடுத்து வாங்கி சென்றனர்.

இதுபற்றி பூக்கடைக்காரர்கள் கூறுகையில் "கோடை காலம், மழைக்காலம், குளிர்காலம் என மாறி, மாறி வரும்போது மல்லிகை பூக்கள் உற்பத்தி அதிகரித்து இருந்தால் குறைந்த முதலீட்டு தொகையில் கொள்முதல் செய்யப்பட்டு ஒரு முழம் மல்லிகைப்பூ ரூ.100-க்கு கீழேயும், மல்லிகை பூக்கள் உற்பத்தி குறைந்து இருந்தால் அதிக செலவில் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.100-க்கு மேலேயும் விற்பனை செய்யப்படும். இந்த நிலையில் ஆவணி மாத வளர்பிறை முகூர்த்த விசேஷத்தை முன்னிட்டு கடந்த 4 நாட்களாக ஒரு முழம் மல்லிகைப்பூ ரூ.150 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்