முகநூலில் அவதூறு பதிவிட்ட பா.ஜனதா நிர்வாகி கைது

தூத்துக்குடியில் அமைச்சர்கள் குறித்து முகநூலில் அவதூறு பதிவிட்ட பா.ஜனதா நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-15 18:45 GMT

தூத்துக்குடியில் அமைச்சர்கள் குறித்து முகநூலில் அவதூறு பதிவிட்ட பா.ஜனதா நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

முகநூலில் அவதூறு

தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசல் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வபாலன் (வயது 29). இவர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக உள்ளார்.

இவர் முகநூலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி, மனோதங்கராஜ், டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டவர்களின் படத்தை அவதூறாக சித்தரித்தும், இரு கட்சிகளுக்கு இடையே விரோதத்தை வளர்க்கும் விதமாகவும் பதிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது.

பா.ஜனதா நிர்வாகி கைது

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் அந்தோணிராஜ் சிப்காட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து, பா.ஜனதா நிர்வாகி செல்வபாலனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்