சீர்காழி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி

சீர்காழி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-06-01 13:01 GMT

மயிலாடுதுறை:- 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் தாசில்தார் சபிதா, சமூக நலத்துறை தாசில்தார் சாந்தி, குற்ற தடுப்பு பிரிவு தாசில்தார் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டல தாசில்தார் ரவிச்சந்திரன், நில அளவர் ஸ்ரீதர், கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர்கள் குபேந்திரன், பவளச்சந்திரன், நவநீதன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்