மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தி

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தி நாளை (புதன்கிழமை) தொடங்கி வருகிற 22-ந் தேதி வரை நடக்கிறது.

Update: 2023-06-05 19:30 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தி நாளை (புதன்கிழமை) தொடங்கி வருகிற 22-ந் தேதி வரை நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

4 தாலுகாக்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களிலும் 1432-ம் பசலிக்கான ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் நாளை (புதன்கிழமை) தொடங்கி வருகிற 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. வருவாய் தீர்வாயம் நடத்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ள வருவாய் தீர்வாயம் பற்றிய விவரம் வருமாறு:-

தரங்கம்பாடி தாலுகாவில் வருவாய் தீர்வாய அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் நாளை முதல் 16-ந் தேதி வரை அங்கு ஜமாபந்தி நடத்துகிறார்.

குத்தாலம்- மயிலாடுதுறை

குத்தாலம் தாலுகாவிற்கு வருவாய் தீர்வாய அலுவலராக, மாவட்ட வழங்கல் அலுவலர் நாளை முதல் 15-ந் தேதி வரையும், மயிலாடுதுறை தாலுகாவிற்கு வருவாய் தீர்வாய அலுவலராக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் நாளை முதல் 15-ந் தேதி வரையும், சீர்காழி தாலுகாவிற்கு வருவாய் தீர்வாய அலுவலராக சீர்காழி வருவாய் கோட்ட அலுவலர் நாளை முதல் 22-ந் தேதி வரையும் ஜமாபந்தி நடத்த உள்ளனர்.

வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து சமூக இடைவெளி விட்டு வரிசையில் சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்க அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்