தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி

வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது.

Update: 2023-06-09 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று முன்தினம் 7-வது நாளாக ஜமாபந்தி வேதாரண்யம் கோட்டாட்சியர் (பொறுப்பு) மதியழகன் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. புஷ்பவனம், தேத்தாகுடி வடக்கு, செம்போடை, குரவப்புலம், ஆதனூர், கருப்பப்புலம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர் இதில்ஆதரவற்ற விதவைச் சான்று கோரி விண்ணப்பித்த ஒரு பெண்ணுக்கு சான்றிதழை கோட்டாட்சியர் வழங்கினார். ஜமாபந்தியில் தாசில்தார் ஜெயசீலன், வருவாய் கோட்ட நேர்முக உதவியாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் கவியரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்