தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி

திருவையாறு தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது.

Update: 2023-05-11 21:03 GMT

திருவையாறு:

திருவையாறு தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி தஞ்சை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா தலைமையில் நேற்று தொடங்கியது. நடுக்காவேரி சரகத்திற்குட்பட்ட திருவாலம்பொழில், நடுக்காவேரி கிழக்கு, நடுக்காவேரி (மேற்கு), கருப்பூர், கோனேரிராஜபுரம், மன்னார்சமுத்திரம், ஈஸ்வரன்கோவில்பத்து, வரகூர், அள்ளுர், அம்பதுமேல்நகரம், குழிமாத்தூர், வெள்ளாம்பெரம்பூர் (கிழக்கு). வெள்ளாம்பெரம்பூர் (மேற்கு) ஆகிய கிராமங்களை சேர்ந்த கணக்குகள், பட்டா மாற்றம், பதிவேடுகள், இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய விவரம் உள்பட அனைத்து பதிவேடு கணக்குகளையும் ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், நிலஅளவை உட்பிரிவு, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்பட 34 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் தாசில்தார் பழனியப்பன், சமூகபாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் அருள்பிரகாசம், குடிமைபொருள் வழங்கல் தனிதாசில்தார் சுந்தரசெல்வி, மண்டல துணை வட்டாட்சியர் வெண்ணிலா, துணை தாசில்தார் கலைவாணன், வருவாய் ஆய்வாளர் நவநீதிகிருஷ்ணன் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்