ஜாம்-ஜெல்லி தயாரிப்பு பயிற்சி; 16-ந் தேதி நடக்கிறது

ஜாம்-ஜெல்லி தயாரிப்பு பயிற்சி 16-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-10-05 21:43 GMT

எல்லா பழங்களையும், எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் பயிரிட முடியாது. பழங்கள் அதிகப்படியாக உற்பத்தியாகும் காலங்களில் அவற்றின் விலை குறைவாகவும், இதனை உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு தக்க வருவாயும் கிடைக்காமல் போய்விடுகின்றன. எனவே இத்தகைய நிலை வராமல் இருக்க உற்பத்தி செய்த பழங்களை பதப்படுத்தி பாதுகாத்து விற்பனை செய்ய வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு அதிகப்படியான வருவாய் கிடைக்க வாய்ப்புண்டு. பழரசபானம் தயாரிப்பதை விவசாயிகளே உபதொழிலாக மேற்கொள்ளலாம். மேலும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தங்களுடைய குடும்ப வருமானத்தை உயர்த்தவும், பழரசபானம் தயாரிப்பதை சுயவேலை வாய்ப்பு தொழிலாக மேற்கொள்ளலாம்.

இதற்கு உதவும் வகையில் சிறுகமணி, வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) பழங்களில் இருந்து ஜாம் மற்றும் ஜெல்லி தயாரிப்பு பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியில் பங்கு கொள்ள விரும்புவோர் வேளாண்மை அறிவியல் நிலைய தொலைபேசி எண்ணில் (0431-2962854) அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும் என்று திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளிஅர்த்தநாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்