ஜல்லிக்கட்டில் வீரர் உயிரிழப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிதியுதவி

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் மாடுமுட்டி இறந்த மாடுபிடி வீரரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-04-27 12:24 GMT

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, கீரனூர் சரகம், சீமானூர் கிராமத்தில் 23-4-2023 அன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, இச்சிக்காமாலைப்பட்டியைச் சேர்ந்த திரு.ஜெயந்த், த/பெ.ஆறுமுகம் (வயது 21) என்கின்ற மாடுபிடி வீரர், மாடு முட்டியதில் உயிரிழந்தார் என்ற செய்தியினை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்