ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்ததையடுத்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு ெவடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-18 19:38 GMT

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு வெடித்ததுடன், இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன்படி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, விசுவக்குடி, தொண்டமாந்துறை, ஆலத்தூர் தாலுகா கொளத்தூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடினர். மேலும் விசுவக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கடலை மிட்டாய் இனிப்பு கொடுத்து கொண்டாடினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு தொண்டமாந்துறை, கொளத்தூரில் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்துள்ளது. வருகிற 27-ந்தேதி விசுவக்குடியில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக்குழுவினர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூறுகையில், இந்த தீர்ப்பு ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்களுக்கு கிடைத்த வெற்றி. தீர்ப்பினால் இனி ஜல்லிக்கட்டு போட்டி தடையில்லாமல் நடைபெறும் என்று நம்புகிறோம், என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்