ஜெயின் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் ஜெயின் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-06 19:45 GMT

ஜெயின் மிஷன் சாரிடபுள் டிரஸ்ட் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் சாந்திலால் தலாவாத் தலைமை தாங்கினார். ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிக் மாவட்டத்தில் ஸ்ரீசம்மத் ஷிகர்ஜி தீர்த்த தலத்தை சுற்றுலா தலமாக அறிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த அறிவிப்பை அரசு உடனே திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்