பெண் உள்பட 2 பேருக்கு சிறை தண்டனை

பெண் உள்பட 2 பேருக்கு சிறை தண்டனை

Update: 2022-12-31 19:00 GMT

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார், கடந்த 30.1.2022 அன்று குரும்பபட்டி பிரிவு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட செம்பட்டியை சேர்ந்த திவாகர் (வயது 28) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் மற்றொரு கஞ்சா வியாபாரியான தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த சுகப்பிரியா (36) என்பவரும் சிக்கினார். இதுகுறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 2 பேரிடம் இருந்து 23½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு மதுரை சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி செங்கமலசெல்வன் வழக்கை விசாரித்தார். இந்த வழக்கு விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி செங்கமலசெல்வன் தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சுகப்பிரியாவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதமும், திவாகருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்