அரசு பஸ்மோதி பெண் பலியான வழக்கில் டிரைவருக்கு சிறைதண்டனை

அரசு பஸ்மோதி பெண் பலியான வழக்கில் டிரைவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-09-16 18:45 GMT

தொண்டி, 

ஆர்.எஸ். மங்கலம் தாலுகா ஆனந்தூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மனைவி லட்சுமி. இவர் கடந்த 2017 -ம் ஆண்டு ஜூன் மாதம் தனது கணவருடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு அரசு பஸ்சில் ஏறி ஆனந்தூருக்கு சென்றுள்ளார். அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கிய லட்சுமி சாலையை கடக்க முயன்றபோது அதே பஸ் அவர் மீது ஏறியதில் படுகாயம் அடைந்து பலியானார். இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் வழக்கு விசாரணை திருவாடானை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பிரசாத் பஸ் டிரைவரான தேவகோட்டை தாலுகா கண்ட தேவி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 29) என்பவருக்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்