விவசாயிக்கு 2 ஆண்டு சிறை

விவசாயிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-08-25 17:01 GMT

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள பனங்காட்டான்வயல் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 72). விவசாயி. கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் குருந்தப்பனுடைய மனைவி நாச்சம்மையை மானபங்கப்படுத்தி தலையில் அரிவாளால் வெட்டினார். அதை தடுக்க வந்த குருந்தப்பனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இது குறித்து வேலாயுதப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெக்ஸ் வழக்குப்பதிவு செய்து தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ராமன் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.மாரிமுத்து குற்றம் சாட்டப்பட்ட ராமனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் செந்தில்வேலன் ஆஜராகி வாதாடினார்.


Tags:    

மேலும் செய்திகள்