வாழ்முனீஸ்வரர் கோவில் திருவிழா

திருப்பூண்டியை அருகே வாழ்முனீஸ்வரர் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2022-07-02 17:41 GMT

வேளாங்கண்ணி:

திருப்பூண்டியை அடுத்த மகிழி கிராமத்தில் வாழ்முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 32 அடி உயரத்தில் வாழ் முனீஸ்வரர் சிலை உள்ளது. இந்த கோவிலில் ஆனித்திருவிழாவை நேற்று முன்தினம் நடந்தது. இதை காலையில் காவடி அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர்கள் பக்கிரிசாமி, கமலச்செல்வி, செயல் அலுவலர் சண்முகராஜ் (பொறுப்பு) மற்றும் மகிழி மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்