பூத்துக்குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்
ேகாத்தகிரி பகுதியில் ஜெகரண்டா மலர்கள் பூத்துக்குலுங்குகிறது. இதை புகைப்படம் எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்கின்றனர்.
கோத்தகிரி
ேகாத்தகிரி பகுதியில் ஜெகரண்டா மலர்கள் பூத்துக்குலுங்குகிறது. இதை புகைப்படம் எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்கின்றனர்.
ஜெகரண்டா மரங்கள்
மலைமாவட்டம் என்பதால் நீலகிரியில் பல்வேறு வகையான அரிய வகை மரங்கள், செடிகள் மற்றும் மூலிகை தாவரங்கள் காணப்படுகிறது. இங்கு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தின்போது, பல்வேறு நாடுகளில் இருந்து அரிய வகை மலர் செடிகள் கொண்டு வந்து நடவு செய்யப்பட்டது. இதில், சாலையோரங்களில் வளர்க்கப்படும் அழகு மரங்களில் ஒன்றாக கருதப்படும் ஜெகரண்டா மரங்களும் உள்ளன. இவ்வகை மரங்களில் ஒவ்வொரு ஆண்டுமும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் ஊதா நிறத்தில் பூக்கள் கொத்து கொத்தாக பூத்து குலுங்கும். இவை சாலைகளில் உதிர்ந்து, சாலையும் ஊதா நிறத்தில் அழகாக காட்சியளிக்கும். இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
மனதை மயக்குகிறது
இந்தநிலையில் கோத்தகிரியில் இருந்து குன்னூர், மேட்டுப்பாளையம், கோடநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையோரங்களிலும், கோத்தகிரி பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களின் நடுவிலும் வளர்க்கப்பட்டுள்ள ஜெகரண்டா மரங்களில் கோடை சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே, தற்போது மலர்கள் பூத்து குலுங்கத் ொடங்கி உள்ளன. இந்த மலர்கள் காண்போரின் மனதை மயக்கும் வகையில் உள்ளது.
இதனை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து, மரத்திற்கு அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். ஊதா நிற ஜெகரண்டா மலர்கள் பூத்துக்குலுங்குவதை காண்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.