ஜக்கனாரை ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஜக்கனாரை ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-07-09 12:31 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள ஜக்கனாரை ஊராட்சி மன்றத்தின் சார்பில ்பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சுரேஷ் தலைமை வகித்தார். கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால் கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அரவேனு பஜாரில் இருந்து மாணவ-மாணவிகள் தங்களது கைகளில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், முக கவசம் அணிவோம், மஞ்சள் பையைப் பயன்படுத்துவோம் என்ற கோஷங்களை எழுப்பியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் மூர்த்தி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஊராட்சி சார்பில் பொது மக்களுக்கு மஞ்சள் துணிப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்