கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

Update: 2023-01-05 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள 6 மாத கால அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும், கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊக்க ஊதியத்தை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த கொளஞ்சிவேலு, மகாலிங்கம், அனந்த கிருஷ்ணன், வேல்முருகன், ரஹீம், செல்வராஜ் உள்பட 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்