ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-05 17:15 GMT


வேலூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்-கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோஷி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், செல்வகுமார், சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர் பாபு வரவேற்றார். இதில், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் செ.நா.ஜனார்த்தனன், அ.சேகர், முகமது ஷாநவாஸ் மற்றும் பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ''புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 4 சதவீத அகவிலைப்படியை கடந்தாண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் வழங்க வேண்டும். சரண்விடுப்பு சம்பளம் பெற உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். அரசுத்துறைகளில் உள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்'' என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில், ஜேக்டோ-ஜியா அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர் அஜீஸ்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்