பலா பழ விற்பனை அமோகம்
கொடைக்கானலில் பலா பழ விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
கொடைக்கானல் தாலுகா பெருமாள்மலை, அடுக்கம், பேத்துப்பாறை வாழைகிரி, பண்ணைக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலா பழங்கள் அதிகளவில் விளைகின்றன. தற்போது சீசன் என்பதால் பலா பழ வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் பல்வேறு இடங்களில் பலா பழ விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றன. இந்த பலா பழங்கள் விலை குறைவு மற்றும் அதிக சுவையுள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து வியாபாரி அருண் கூறுகையில், பலா பழம் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பழம் ரூ.300 முதல் ரூ.400 விற்பனையானது. தற்போது ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர் என்றார்.