ஐயாறப்பர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது.

Update: 2023-05-01 20:49 GMT

திருவையாறு:

திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது.

சித்திரை திருவிழா

திருவையாறு தருமை ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் சமேத ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து 29-ந் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல் நிகழ்ச்சி நடந்தது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழா மே 6-ந் தேதி நடக்கிறது.

இதை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது.இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெறுகிறது.

பொம்மை பூ போடும் நிகழ்ச்சி

7-ந் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன், 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு போலீசார் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்