அதிகாரம் என்னவென்று கவர்னருக்கு தெரியாமல் போனது வேடிக்கையளிக்கிறது: கனிமொழி எம்.பி.
கவர்னரின் அதிகாரம் என்னவென்று கவர்னருக்கு தெரியாமல் போனது வேடிக்கையளிப்பதாக கனிமிழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை,
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவை கவர்னரே நிறுத்திவைத்துள்ளது பற்றி திமுக எம்.பி. கனிமொழி தனது டுவீட்டரில் கூறி இருப்பதாவது;
"ஒரு நியமன பதவியிலிருக்கும் ஆளுநரின் அதிகாரம் என்னவென்று ரவி அவர்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கையளிக்கிறது. அரசியலமைப்புக்கும் ஒரு மாநிலத்தின் இறையாண்மைக்கும் எதிராகச் செயல்படுவதை நிறுத்திவிட்டு, அவர் தனது ஒரே கடமையான ஆளுநர் பணியைச் செய்யலாம்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், "நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு." என்று திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டி விளக்கமும் அளித்துள்ளார்.